யாழ் வெதுப்பங்களுக்கு மூடுவிழாவா?
யாழ். மாவட்டத்தில் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனை கூறியுள்ளனர்.
வடக்கிற்கான பிறீமா மா விற்பனை முகவர்களுடன் ஒரு கலந்துரையாடல் இன்று இடம்பெற்றதில், யாழில் பேக்கறி உற்பத்தி விநியோகத்திற்கான மாவின் அளவை குறைப்பதாக தெரிவித்திருந்தார்கள். எதிர்வரும் நாட்களில் யாழ்.மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற மாவின் அளவினை உடனடியாக குறைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக யாழ் மாவட்டத்தில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் உற்பத்தி அளவினை குறைக்கவுள்ளோம். எனினும் இது தொடர்பில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி எமக்கு வழங்கப்படும் மாவின் அளவை தொடர்ந்து பெற்று தருமாறு தெரிவிக்கவுள்ளோம். அத்துடன் மாவட்ட அரசாங்க பிறீமா நிறுவனத்துடன் கலந்துரையாடி நமக்குரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுகிறோம்.
மா வழங்கப்படாவிட்டால் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர்கள் எச்சரிட்த்துள்ளனர்.
அத்தோடு எரிபொருள் பிரச்சனையும் தற்போது காணப்படுகின்றதாக தெரிவித்த அவர்கள் அரசாங்க அதிபருக்குகோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
யுத்த காலத்தில் கூட நாம் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கான உற்பத்தி பொருட்களை வழங்கி இருந்தோம். ஆனால் தற்போதுள்ள நிலையில் அவ்வாறு செயற்பட முடியாது நிலை காணப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.