அஹுங்கல்லவில் இரு குழுக்களுக்கிடையே இடம் பெற்ற மோதல்
அஹுங்கல்லவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
அஹுங்கல்ல பதிராஜகமவில் இன்று புதன்கிழமை (11) பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசிட் வீச்சு மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இடம் பெற்ற மோதல்
இந்த மோதலில் இரு குழுக்களையும் சேர்ந்த தலா மூன்று பேர் என ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு தரப்பினரின் வாள்வெட்டுத் தாக்குதலில் மற்றைய தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் இதனையடுத்து மற்றைய தரப்பினர் மேற்கொண்ட அசிட் வீச்சு மற்றும் தாக்குதல்களினால் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.