கடத்தல் கொள்ளையனின் இரண்டு வங்கிக் கணக்குகளை முடக்கிய சிஐடி
போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானதாகக் கருதப்படும் இரண்டு தனியார் வங்கிகளில் உள்ள கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினரால் தடைசெய்யப்பட்டுள்ளன.
ஹிக்கடுவையைச் சேர்ந்த இஸ்ஸோ சுஜி என அழைக்கப்படும் குணரத்ன சுஜித் சில்வாவின் வங்கிக் கணக்குகளே இவ்வாறு சிஐடி அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
துபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தல்
சந்தேக நபர் பாணந்துறை மற்றும் தென் மாகாணத்தை மையமாக கொண்டு துபாய் நாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான 4 மாத காலப்பகுதியில் குறித்த பணம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை குறித்த கணக்குகளில் 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.