கொலஸ்ட்ரால் முதல் எடை இழப்புவரை விரட்டியடிக்கும் சின்னப்பொருள்!
நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் பெருங்காயத்தை ஒரு ஸ்பூன் வெந்நீரில் போட்டு குடித்து வந்தால் உடல் எடை முதல், தலைவலி சளி இருமல் வரை பறந்து போகும்.
வீட்டு சமையலறையில் வைத்திருக்கும் பெருங்காயம், உணவை ருசிக்க வைப்பதோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
உங்களுடைய உடல் பருமனை மட்டுமில்லாமல் வயிற்றுப் பொருமல், ஒற்றைத் தலைவலி ஆகிய பிரச்சனைகளையும் பெருங்காயம் காணாமல் போக செய்யும்.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தைக் கலந்து வெறும் வயிற்றில் குடித்துவிடுங்கள்.
உடல் எடையை கணிசமாக குறைக்க இந்த அற்புத பானம் உங்களுக்கு உதவும்.
அதுமட்டுமில்லாமல் சருமம் கூட பொலிவு பெறும்.
பெருங்காய தண்ணீர் நன்மைகள்
ஒற்றை தலைவலியை நீக்க பெருங்காய தண்ணீர் பருகலாம்.
இந்த பெருங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மிகுதியாக உள்ளன.
மாதவிடாய் வலியை நீக்கி நிவாரணம் அளிக்கும்.
சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டால் வெந்நீருடன் பெருங்காயம் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் சுவாச பிரச்சனைகளை கொஞ்சம் சமாளிக்கலாம்.
அதுமட்டுமில்லை, செரிமான பிரச்சனைக்கு, பெருங்காயத்தை மையாக அரைத்து அந்த பேஸ்ட்டை தொப்புளை சுற்றி தேய்க்கலாம்.
இரத்தத்தில் காணப்படும் கெட்ட கொழுப்பை சுத்தமாகக் குறைக்கும்.
எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க நினைப்பவர்கள் பெருங்காயம் தண்ணீர் குடிக்கலாம்.
பெருங்காயத்தை உணவில் தொடர்ந்து பயன்படுத்தினால் இதய நோய் அபாயம் குறையும்.