வவுனியாவில் களைகட்டிய சித்திரை புத்தாண்டு வியாபாரம்!
2025 ஆம் ஆண்டு தமிழ் - சிங்களப் சித்திரை புத்தாண்டானது எதிர்வரும் திங்கட்கிழமை பிறக்கவுள்ள நிலையில் மக்கள் மும்மரமாக புத்தாண்டு பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
இந் நிலையில் வவுனியா நகருக்கு அதிகளவிலானது மக்கள் வருகை தந்து புத்தாடைகள், வெடிகள், இனிப்பு பண்டங்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.
அதேவேளை இலங்கையில் , கடந்த வருடத்தை விடவும் இந்த வருடத்தில் பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வவுனியாவில் வியாபாரம் களை கட்டியுள்ளது, நகரில் அதிக சனநெரிசல்களை கடந்த வருடத்தை விட இம் முறை புத்தாண்டு வியாபாரம் களை கட்டியுள்ளது, மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.