சீன தடுப்பூசி இலங்கைக்கு வழங்கப்பட்டதற்கு காரணம் யார் தெரியுமா?
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே சீன தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது என இலங்கை தெரிவித்திருப்பதை உலக சுகாதார ஸ்;தாபனம் மறுத்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அறிக்கை தொடர்பில் டெய்லிமிரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் உலக சுகாதார ஸ்தாபனம் இதனை தெரிவித்துள்ளது.
மருந்தொன்றிற்கு அவசர அனுமதி வழங்குவது குறித்து தீர்மானிப்பதற்கு மூன்று மாதங்களாகும் என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் மருந்து தயாரிப்பாளர்கள் சமர்ப்பித்துள்ள தரவுகளின் தன்மை தரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து இது முடிவுசெய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
நாடுகள் தங்களின் தேசிய சட்டங்கள் மற்றும்விதிமுறைகளின் அடிப்படையில் எந்த சுகாதார உற்பத்திக்கும்அவசர பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதற்கான அதிகாரத்தை கொண்டுள்ளன எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் அவசரதேவைக்காக பயன்படுத்தும் முடிவை அந்த நாடுகளே எடுக்கின்றன என குறிப்பிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனம் இதற்கு தனது அனுமதிஅவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளது. உலக சுகாதாரஸ்தபன தலைவருடன் இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட பேச்சுவார்த்தை காரணமாகவே சீன தடுப்பூசிக்கு உலக சுகாதாரஸ்தாபனம் அனுமதி வழங்கியது என ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
சீனாவிடமிருந்து இலங்கைக்கு 600,000 தடுப்பூசிகள் கிடைத்தன ஆனால் உலக சுகாதார ஸ்தாபனம் சீன தடுப்பூசிக்கு அனுமதி வழங்காத நிலை காணப்படட்டது என ஜனாதிபதியின்பேச்சாளார் தெரிவித்துள்ளார் எனினும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உலகஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் மேற்கொண்ட நேரடி பேச்சுவார்த்தைகளின் பின்னர் உலக சுகாதார ஸ்தாபனம் பின்னர் சீனாவின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிடமிருந்து மேலும் 300,000 டோஸ் தடுப்பூசியை பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டபேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளது என ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.