இலங்கைக்கான சீன – அமெரிக்க தூதுவர்கள் சந்திப்பு
இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸென்ஹொங் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் இடம்பெற்றதாக தூதரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பரஸ்பர ஆர்வமுள்ள, பரந்த விடயப்பரப்பு தொடர்பில் நட்பு ரீதியிலான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
Met with PRC Ambassador Qi Zhenhong about the political and economic situation in SL. Interesting to share ideas about trade, investment, and development, as well as ways to support Sri Lankan efforts to ensure political stability & economic growth. pic.twitter.com/MM6GDhKV5F
— Ambassador Julie Chung (@USAmbSL) June 13, 2022
அத்துடன் இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்க இலங்கைக்கு உதவுவதற்கு சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட முடியும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளது.
