வடக்கையும் ஆக்கிரமிக்கும் சீன உற்பத்திகள்!
அண்மையில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெற்ரோல் விநியோகத்தை ஆரம்பித்தது. இந்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை(24) மானிப்பாய் மெமோறியல் வீதியில் சினோபெக் ஒயில் வகைகளை அறிமுகம் செய்து விநியோக முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோல்ட் மவுன்ட் பிறதர்ஸ் பிறைவட் லிமிட்டட்
ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் ஏக விநியோகஸ்தரான இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவட் லிமிட்டட் நிறுவனமானது யாழ்ப்பாணத்திற்கான தனது விநியோகஸ்தராக கோல்ட் மவுன்ட் பிறதர்ஸ் பிறைவட் லிமிட்டட் எனும் நிறுவனத்தினை இன்று மானிப்பாயில் ஆரம்பித்துள்ளது.
நிகழ்வில் பங்குதாரர்களான பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜயசாந்த தொட்டஹேவகே, தேசிய விற்பனை முகாமையாளராக துசிதகுமார, விற்பனை முகாமையாளர் எம்.குகன் விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் சினோபெக் எரிபொருள் விற்பனை முகாமையாளர்கள் வாகன திருத்துநர்கள் வாகன உதிரிப்பாக விற்பனையாளர்கள் பொது மக்கள் கலந்துகொண்டனர்.
அதேவேளை கடந்த சில காலமாக சீனாவின் உற்பத்திகளை தென் மற்றும் மேல் மாகாணங்களில் விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது வடக்கிலும் விற்பனையை தொடங்கியுள்ளது.