133 பேருடன் விழுந்து நொருங்கிய விமானம்; உலகில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
தென்சீனாவில் 133 பேருடன் சீன விமானமொன்று விழுந்து நொருங்கியுள்ளதாக பரபரப்பு தகவலொன்று வெளியாகியுள்ளது.
சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு இன்று புறப்பட்டது.
அந்த விமானத்தில் 133 பேர் பயணித்தனர். விமானம் குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைபகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மலைமீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பெரும் தீ விபத்து எற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்றுள்ளனர்.
விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை என்ன ஆனது? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
Update: Boeing plane with 132 people onboard crashes in S.China's Guangxi. Casualties unknown. (Video via People's Daily) https://t.co/LQ97EFvX2k pic.twitter.com/lSSU3AD86y
— Global Times (@globaltimesnews) March 21, 2022