அடுத்தடுத்து சிக்கும் சீன பிரஜைகள் ; பயண பொதிகளால் பரபரப்பாகிய விமான நிலையம்
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட, இரண்டு கோடியே 84 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 13 வெளிநாட்டு பயணிகள் நேற்று (02) செவ்வாய்க்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 28 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட சீன நாட்டு பிரஜைகள் என விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணை
இவர்கள் இன்று (02) அதிகாலை 01.10 மணியளவில் தாய்லாந்தின்பாங்கொக் நகரிலிருந்து தாய் ஏயர் ஏசியா மற்றும் பாடிக் ஏயர் ஆகிய விமான சேவைகளுக்குச் சொந்தமான விமானங்கள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அதன்பின்னர், விமான நிலையத்தின் வருகை முனையத்தின் கிரீன் சேனல் வழியாக குறித்த சிகரெட் தொகையை கொண்டு செல்ல முயன்ற போதே இவர்கள் சுங்க அதிகாரிகளால் பிடிபட்டனர்.
பல்கலை மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள் ; பிறந்த நாள் விழாவில் கொடூரம் ; அடுத்தடுத்து நடந்த சம்பவம்
சந்தேகநபர்கள் கொண்டு வந்த 22 பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீன தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 948 கார்டூன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
இவற்றில் மொத்தம் ஒரு இலட்சத்து 89 ஆயிரத்து 600 சிகரெட்டுகள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.