சீன உரக் கப்பல் விவகாரம்: கையை விரித்தார் அமைச்சர் மஹிந்தானந்த

Mahindananda Aluthgamage Government Of Sri Lanka China Ministry of Agriculture Ship
By Shankar Sep 07, 2022 01:13 AM GMT
Report

எமது அரசாங்கம் இரசாயன உரத்தை தடை செய்து ஒரே நாளில் உரம் தொடர்பான கொள்கை மாற்றியமைத்ததால் நாட்டின் விவசாயத்துறை பாதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

தவறான தீர்மானத்தை அரசாங்கம் 06மாத காலத்திற்குள் திருத்திக்கொண்டது. சீன உரக் கப்பல் விவகாரத்திற்கு நான் பொறுப்புக்கூற வேண்டிய தேவை கிடையாது, அதற்கான அவசியமும் இல்லை என முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthagamage) தெரிவித்துள்ளார்.

சீன உரக் கப்பல் விவகாரம்: கையை விரித்தார் அமைச்சர் மஹிந்தானந்த | Chinese Fertilizer Ship Issue Mahindananda

நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை (06-09-2022) இடம்பெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் உரம் தொடர்பில் கொள்கையை மாற்றியமைத்ததால் விவசாயத்துறை பாதிக்கப்பட்டது என எதிர் தரப்பின் உறுப்பினர் குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்கிறேன்.

சீன உரக் கப்பல் விவகாரம்: கையை விரித்தார் அமைச்சர் மஹிந்தானந்த | Chinese Fertilizer Ship Issue Mahindananda

உரம் தொடர்பான தவறான கொள்கை ஒருபோகத்தில் மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தியது,தவறை திருத்திக்கொண்டோம். இரசயான உரம் தடை தொடர்பான தீர்மானம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது.

இடைப்பட்ட காலத்திற்கு தேவையான இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. பெரும்போகத்தில் தான் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டது, இதனால் தான் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

சேதன பசனை தொடர்பான திட்டம் தவறல்ல,அதனை ஒரே தடவையில் அமுல்படுத்தியது தான் தவறு,கட்டம் கட்டமாக செயற்படுத்தியிருக்கலாம்.

சீன உரக் கப்பல் விவகாரம்: கையை விரித்தார் அமைச்சர் மஹிந்தானந்த | Chinese Fertilizer Ship Issue Mahindananda

கடந்த காலங்களில் மக்களால் விமர்சிக்கப்படாத அரசியல்வாதி எவரும் கிடையாது. பிறரது குழந்ததைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க சென்றதால் எனது உருவ பொம்மையை மக்கள் எரித்தார்கள்.

விவசாயத்துறை அமைச்சராக பதவி பிரமாணம் செய்யும் போது உரம் தொடர்பான விடயதானம் எனக்கு பொறுப்பாக்கப்படவில்லை. விவசாயத்துறை திணைக்களம்,விவசாய காப்புறுதி திணைக்களம் மாத்திரமே என்னிடமிருந்து. உரம் தொடர்பில் இரு இராஜாங்க அமைச்சர்கள் இருந்தார்கள்.

சேதன பசளை தொடர்பிலான கொள்கையை அரசாங்கம் முன்னெடுக்கும் போது இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தேன்.

சீன உரக் கப்பல் விவகாரம்: கையை விரித்தார் அமைச்சர் மஹிந்தானந்த | Chinese Fertilizer Ship Issue Mahindananda

ஆனால் அப்போது ஜனாதிபதி இரசாயன உர இறக்குமதி மற்றும் பாவனை மீதான தடைக்கான பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இரசாயன உர இறக்குமதி செய்வதை தடை செய்யும் அமைச்சரவை பத்திரத்திற்கு அன்று எதிர்ப்பு தெரிவித்தேன்.

சேதன பசளை திட்டத்தை கட்டம், கட்டமாக செயற்படுத்துவோம் என்றேன்.கலக்கமடைய வேண்டாம், சேதன பசளை திட்டத்திற்காக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்படும். இதற்காக இரு இராஜாங்க அமைச்சு நியமிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சேதனை பசளை திட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலணி ஒரு நாள் கூட கூடவில்லை, சுகாதார மற்றும் சுற்றாடற் துறை அமைச்சும் சேதன பசளை திட்டம் குறித்து கவனம் செலுத்தவில்லை. நியமிக்கப்பட்ட இரு இராஜாங்க அமைச்சும் கருததுரைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்காக (Gotabaya Rajapaksa) கருத்துரைத்தேன்.

சீன உரக் கப்பல் விவகாரம்: கையை விரித்தார் அமைச்சர் மஹிந்தானந்த | Chinese Fertilizer Ship Issue Mahindananda

சீன கப்பல் விவகாரத்திற்கு நான் பொறுப்பு கூற வேண்டியதில்லை, அது எனது பொறுப்பல்ல,இவ்வளவு காலம் நான் இதனை குறிப்பிடவில்லை. சீன உர மனுகோரல் பகிர்ந்தளிப்பு தொடர்பான நவடிக்கைகளில் நான் தலையிடவில்லை. விவசாயத்துறை அமைச்சர் என்ற ரீதியில் சீன உரக் கப்பல் தொடர்பில் பரிசீலனை செய்தேன்.

சீன உரக் கப்பல் விவகாரத்தில் எவ்வித முறைகேடும் இடம்பெறவில்லை. சட்டமாதிபரின் ஆலோசனைக்கமையவே அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.விவசாய உரம் தொடர்பான தவறான கொள்கையை அரசாங்கம் ஆறு மாத காலத்திற்குள் திருத்திக்கொண்டது என்றார்.

மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US