உலகை ஆட்டம் காணவைக்கும் சீனாவின் செயல்பாடுகள்; வெளியான தகவல்!
உலகை ஆட்டம் காணவைக்கும் சீனாவின் செயல்பாடுகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா தனது எல்லையோர உள்கட்டமைப்பு மட்டுமின்றி வான் மற்றும் நிலப்பகுதி கண்காணிப்பு அமைப்புகளையும் பல மாதங்களாக மேம்படுத்தி வருகிறதாக கூறப்படுகின்றது.
இதன் மூலமாக எல்லையோரம் தொலைதூரம் தொடங்கி மிக குறுகிய தூரம் வரை சீன படைகளால் சிறப்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை சீனா தனது எல்லையோர உள்கட்டமைப்பு மட்டுமின்றி வான் மற்றும் நிலப்பகுதி கண்காணிப்பு அமைப்புகளையும் பல மாதங்களாக மேம்படுத்தி வருகிறது.
சமீபத்தில் வெளியான தகவல்களின்படி சீன தரைப்படை மற்றும் சீன விமானப்படை ஆகியவற்றுக்கு சொந்தமான வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
இதன் நோக்கம் ஒர் நாடு தழுவிய மிகப்பெரிய வான் பாதுகாப்பு வலைபின்னலை உருவாக்குவதே எனவும் கூறப்படும் அதேவேளை , மேலும் சீனா இந்திய எல்லையோரம் வான் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவி வருகின்றது.
அதேசமயம் கடந்த வாரம் வெளியான பென்டகன் அறிக்கை ஒன்றில் சீனா விண்வெளி சார்ந்த கண்காணிப்பு உளவு , செயற்கைகோள் தகவல் தொடர்பு, செயற்கைகோள் நேவிகேஷன் ஆகியவற்றில் சீன ராணுவம் அதிக முதலீடு செய்வதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை தற்பொழுது முழு உலகையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸில் பிடியில் இருந்து உலகம் இன்னும் மீளாத நிலையில் உலகின் பொருளாதாரமும் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
ஆனால் அதைபற்றிய சிறிய கவலையும் இல்லாமல் சீனா, தனது வான் மற்றும் நிலப்பகுதி கண்காணிப்பு அமைப்புகளையும் மேம்படுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.