வாடகை அப்பாக்களை அறிமுகம் செய்த சீனா; ஆர்வமுடன் தேடிச்செல்லும் பெண்கள்!
சீனாவில் பழங்காலத்தில் இருந்தே பாத் ஹவுஸ்கள் (Bath House) பிரபலம். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென தனித்தனியே குளிக்கும் இடங்கள் இருக்கும்.
மிகவும் சலிப்பாக இருப்பவர்கள், `போய் ஒரு குளியலைப் போட்டு விட்டு வருவோம்' என பாத் ஹவுஸ் பக்கம் கிளம்பிவிடும் பழக்கம் சீனாவில் இருக்கிறது. அங்குள்ள சில பாத் ஹவுஸ் இடங்கள் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, மசாஜ், உணவு மற்றும் பானங்கள் என சகல வசதியோடு இருக்கும்.
கட்டணமும் இல்லையாம்
தற்போது வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணம் ஷென்யாங்கில் பாத் ஹவுஸ் ஒன்றில் சமீபத்தில் வெளியான புதிய சேவை, அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.
அதாவது பாத் ஹவுஸிற்கு ஆண் குழந்தையை அழைத்து வரும் அம்மாக்களுக்கு உதவும் வகையில், `Rent A Dad' (வாடகை அப்பா) என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் பெண்கள் மட்டுமே இருப்பதற்காக இந்தப் புதிய அம்சம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த வாடகைத் தந்தை அந்தக் குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, உடையை மாற்றுவது, பராமரிப்பது போன்ற வேலைகளைச் செய்வார்.
எனினும் இந்தச் சேவைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாதாம்.
இந்த அறிவிப்பு குழந்தைகள் தொல்லை செய்வார்களே என கவலையுடன் அங்கு செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏறொபடுத்தியுள்ளதாம்.