சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தலைமை தேரர் அதிரடி கைது ; தாய்க்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தலைமை தேரரான பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது செய்யப்பட்டமை தொடர்பான காரணிகள் இன்றைய தினம் (09) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவு
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பல்லேகம ஹேமரத்ன தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான உண்மைகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நேற்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்தது. இதன்போது, சந்தேக நபரான தேரர் மற்றும் குறித்த சிறுமியின் தாய் ஆகியோரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அனுராதபுரம் தலைமை நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன, சந்தேக நபரான தேரருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்துள்ளார்.
யாழ் . போதனா வைத்தியசாலையில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் ; பல மில்லியன் பெறுமதியான மருந்துகள் தீக்கிரை
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை பல்லேகம ஹேமரத்ன தேரர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.