திரைக்கு வரும் முதலமைச்சர் விஜய்யின் மகன் சிக்மா திரைப்படம்
தமிழ் நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படம், எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சுந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படம், புதையல் வேட்டை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை மையமாகக் கொண்ட ஒரு அதிரடி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

4 மாத காலப்பகுதியில் மொத்தம் 65 நாட்களில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளதுடன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.