பெண் காவல் ஆய்வாளரை பெருமைப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் நேற்றையதினம் கொட்டும் மழைக்கிடையே பொலிஸார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மழையில் நனைந்து, உடல் நலம் குன்றிய இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவரைப் பார்த்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, இளைஞரை அலேக்காக தோளில் தூக்கி ஓடிச்சென்று ஆட்டோவில் ஏற்றி, மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார். மீட்பு பணி நடக்கும் இடத்தில் சில பணியாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.
எனினும் அவர்களை வைத்து, இந்த நடவடிக்கையை பெண் காவல் ஆய்வாளர் செய்யாது , அர்ப்பணிப்பு, பணி ஈடுபாடு காரணமாக அவரே களத்தில் இறங்கி மீட்பு நடவடிக்கை செய்தார்.
சென்னையில் பெய்து வரும் கனமழையின் போது கீழ்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி கிடந்த இளைஞரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி இராஜேஸ்வரி அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார் pic.twitter.com/ibCyRxgf7J
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 12, 2021
இதனையடுத்து ராஜேஸ்வரியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உள்ளிட்ட பலரும் பெண் காவலருக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்ததுடன் அவருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
ஆபத்தான நேரத்தில் உயிரைக் காப்பாற்றிய பெண் பொலிஸ் அதிகாரி! வைரலாகும் வீடியோ