கோழி கடை முதலாளியால் மனைவிக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; தீவிரமாகும் விசாரணை
கணவரால் பெற்றோல் ஊற்றி தீயிட்டு கொலை செய்யப்பட்டதாக்க கூறப்படும் பெண் ஒருவரின் சடலம் பிபிலை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 40 வயதுடைய பெண் எனவும், இரண்டு குழந்தைகளின் தாய் எனவும் பொலிஸார் தெரவித்தனர்.

கணவர் கைது
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கோழி இறைச்சி விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருபவர் எனத்தெரிய வந்துள்ளது.
அவருடைய காலில் எரிகாயங்கள் காணப்பட்டுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பன் கீழ் பிபிலை வைத்தியசாலையில் சந்தேகநபர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் கணவரின் காதலிக்கு சம்பவம் செய்த இரு பிள்ளைகளின் தாய் ; 47 முறை கத்தி குத்து ; இறுதியில் கிடைத்த தண்டனை
குடும்பத்தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பிபிலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.