சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்தி CSK அபார வெற்றி
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடிப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது
இந்தநிலையில் 156 எனும் வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.