ஹோட்டல் ஒன்றில் சமையல்காரர் செய்த மோசமான செயல்: வைரலாகும் காணொளி
இந்தியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு வீதியோர ஹோட்டல் ஒன்றில் சமையல்காரர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைப்பது போன்ற காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஹோட்டல் சமையல்காரர் சப்பாத்தியை சுடுவதற்கு முன்னர் அதில் எச்சில் துப்பவதும் அதை சமைப்பதும் போல காணொளி ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
गाजियाबाद के एक चिकन पॉइंट का वीडियो सामने आया है, जिसमें एक शख्स थूक लगाकर रोटी बनाता दिख रहा है. pic.twitter.com/utDi9Jh9F8
— Anubhav Veer Shakya (@AnubhavVeer) October 17, 2021
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை முன்னெடுத்த பொலிஸார் ஹோட்டலின் சமையல்காரர் தமீசுதீன் என்பவரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட சமையல்காரரான தமீசுதின் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தமீசுதின் நேற்று பிணையில் விடுதலையாகி வெளியே வந்துள்ளார்.