அபிருத்தி லொத்தர் சபையின் சுப்பர் பரிசு வென்ற யாழ் வாசிகளுக்கு காசோலைகள் !
அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர்கள் மூலம் சுப்பர் பரிசுப்பொதி வென்ற யாழ்.மாவட்டத்தை சேர்ந்த வெற்றியாளர்களுக்கு காசோலை வங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வு இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அபிவிருத்தி லொத்தர் சபையின் யாழ்பாண மாவட்ட வெற்றியாளர்களுக்கு காசோலையும், அத்துடன் நிகழ்வில் விற்பனை செய்த விற்பனை முகவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் யாழ்பாண மாவட்ட விற்பனை மேம்படுத்தல் அதிகாரி எம்.தவகோகுலன் மற்றும் கிளிநொச்சி வவுனியா விற்பனை மேம்படுத்தல் அதிகாரி கே.பிரதீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.