யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவு நடந்த சம்பவம்!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி வைத்தியசாலைக்கு நேற்று நள்ளிரவு நோயாளி ஒருவர் வந்தபோது அங்கு வாசலின் முன்னால் எவரும் இல்லை என்ற நிலையில் யாழ் போதனா வைத்திய சாலைக்கு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் வந்த முறைப்பாட்டை சாவகச்சேரி வைத்தியசாலை அட்தியட்சகரை தொடர்பு கொண்டதில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில்,
குறித்த நேரம் வெளியில் கடமையில் இருந்த தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் வாசலில் இல்லாதிருந்திருக்கின்றனர்.
அதேவேளை பின்னால் இருந்த அவசர சிகிச்சை பிரிவின் இரண்டு கதவுகளும் மூடுப்பட்டிருந்த நிலையில் இதற்கு வெளியில் இருந்து பணியாற்றவேண்டிய ஊழியர் அத்தருணம் அவ்விடத்தில் இல்லாதிருந்த நிலையில் வந்தவர்கள் திரும்பிச்சென்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஊழியர்கள் மீதும் வைத்தியசாலை உத்தியோகத்தர் மீதும் திணைக்கள ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாதிருக்க முறைப்பாட்டு கைத்தொலைபேசி இலக்கம் கதவில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக அறியத்தரப்பட்டுள்ளது.