வைத்தியர் அர்ச்சுனாவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை!
வைத்தியர் அருச்சுனா பல முறைகேடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் பலவற்றினை முன்வைத்திருந்தார்.
அவை தொடர்பில் ஆதாரங்களை தொகுத்து அவர் இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு மனுவாக கொடுத்திருக்கவேண்டும் இனியும் காலம் போகவில்லை. செய்யலாம்,
நீதிமன்றம் தற்போது பணித்தபடி பொலிசில் தனது வாக்குமூலங்களை ஆதராங்களுடன் சமர்ப்பிக்கவும் வேண்டியுள்ளது.
அதேவேளை மருத்துவர் தன்னை அடித்ததாக கூறிய விடயத்தில் கூட அவர் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
அவர் பலரது பெயர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் நேரலைகளில் கடுமையாக சாடியிருந்தமையால் அவர்கள் தங்களுடைய நலன் கருதி வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதை நாம் குறை கூறவும் முடியாது.
அருச்சுனாவிடம் சரியான ஆதாரம் இன்றி அருச்சுனா குற்றம் சாட்டியிருக்க முடியாது. ஆதாரங்கள் இருப்பின் அந்த வழக்குகளில் இருந்து அவரால் விடுதலை பெற முடியும். தவறின் அதற்குரிய தண்டனையினை அவர் ஏற்க வேண்டியிருக்கும்.
சும்மா எழுந்தமானமாக யாருடய பெயரையும் உச்சரித்து அவர் தவறானவர் கள்ளர் என்று எவரும் கூறமுடியாது தானே ? பாதிக்கப்படுவர் தனக்கான நீதியை பெற உரித்துடையவர்.
ஆதாரம் வைத்துக்கொண்டு தாராளமாக விமர்சிக்கலாம் அது சட்ட பாதுகாப்பை கொண்டிருக்கும். இதில் ஊழல் வாதிகள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் என்ற கருத்து தவறானது. அதை தீர்மானிக்கவேண்டியது அது தொடர்பிலான ஆதாரங்களே.
எனவே முகப்புத்தகத்தில் அதிகமாக நீதிமன்றினையும் வழக்குகளையும் விமர்சிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
பலவேளைகளில் தனிப்பட நபர்களை சுட்டி எழுதப்படுபவற்றில் அவை கவனிக்கப்படாமல் விடப்படுவதாலேயே தப்பிக்கொள்கின்றோமே தவிர அதை உரிய சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தும்போது நிச்சயம் பாதிப்பு இருக்கும் பதில் சொல்லவேண்டியிருக்கும்.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் சமூகவலைத்தளங்களை பெருமளவில் கட்டுப்படுத்துகின்றன.
அர்ச்சுனாவிடம் போதிய ஆதாரங்கள் இருப்பின் அவருக்கு சட்டப்பாதுகாப்பு வழங்க வேண்டியது சட்டவாளர்களின் கடமை அதே வேளை அவர் அரச நடைமுறைகளை மீறியது, ஆதாரமின்றி யாரைப்பற்றியும் இழிவாக பேசியிருந்தால் அதற்கான சட்ட நடவடிக்கைகளில் இருந்து அவரை எந்த சட்டவாளராலும் காப்பாற்ற முடியாதிருக்கும்.
நீதிமன்றம் ஏதாவது கட்டுப்பாடுகள் விதித்திருக்கும் பட்சத்தில் அதனை அவர் கடுமையாக கடைப்பிடிக்காவிடில் பாரதுாரமானதாக அமைந்துவிடும் எனவே பக்கத்தில் உள்ளவர்கள் இது தொடர்பில் அவருக்கு எச்சரிக்க வேண்டும். குறிப்பாக அவர் பேட்டிகளை தவிர்ப்பது நல்லது.
முறைகேடுகள் தொடர்பில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்யமாட்டார்கள் அதனை பாதிக்கப்பட்ட தரப்புதான் செய்யவேண்டும்.