யாழ்ப்பாண பகுதியில் இரவு பயங்கர விபத்து... இரு இளைஞர்கள் வைத்தியசாலையில்!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்த்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தனங்கிளப்பு பகுதியில் இன்றைய தினம் (26-03-2024) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஏ 32 வீதியில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று, தனங்கிளப்பு சந்திக்கு அருகாமையில் துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்த இருவரை மோதியுள்ளது.
இச்சம்பவத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த இருவரும் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதேவேளை படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.