பாடசாலை மாணவன் செய்த மோசமான செயல் ; மடக்கி பிடித்து கைது செய்த பொலிஸார்
தம்பதெனிய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 500,000 ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை திருடிய 16 வயது பாடசாலை மாணவனை கிரியுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த மாணவனின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை மாணவன்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிரியுல்ல, மல்கமுவ பகுதியைச் சேர்ந்தவர்.
பாடசாலை மாணவனுடன் இணைந்து திருட்டைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார், மேலும் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி அவற்றின் பாகங்களை விற்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கிரியுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.