யோசிதவுக்கு பிணை; நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.
இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்தவாரம் மஹிந்த ராஜபக்க்ஷவில் இரண்டாவது புதல்வன் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.