கொழும்பில் செம்மணி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குழப்பம்; கலக்கமடக்கும் பொலிஸார் குவிப்பு
யாழ்ப்பாணம் செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
'படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்' எனும் தொனிப் பொருளில் நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்த தேசமா? புதைகுழிகள் தேசமா?
போராட்டத்தில் கலந்துகொண்டோர் புத்த தேசமா? புதைகுழிகள் தேசமா?, செம்மணயில் எலும்புகளாக எம்மவர்கள், சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே..!, யுத்த குற்றத்தின் சாட்சி செம்மணி, வட கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து' போன்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பில் முன்னெடுப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனனும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.
அதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தை பேரணியாக முன்னோக்கி நகரத்த முற்பட்ட வேளை,பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டகளத்தில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதனால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 65 என்புத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி மீதான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள், எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.