மக்கள் எதிர்ப்பு; நல்லூர் கந்தன் வளாக அசைவ உணவத்தில் அதிரடி மாற்றம்!
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் திறக்கப்பட்ட பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அசைவ உணவகம் தற்போது சைவ உணவகமாக மாறியுள்ளது.
குறித்த உணவகத்திற்கு எதிராக , நல்லை கந்தன் பக்தர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக தற்போது சைவ உணவுகளை மாத்திரம் விற்பனை செய்ய உணவக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
சைவ உணவுகள் மட்டும்
நல்லூர் கந்தன் வளாகத்தில் அசைவ உணவகம் ஆரம்பிக்கப்பட்டதற்கு எதிராக சைவ சமய ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழர் பிரதேசத்தில் இரவோடிரவாக காணி பிடிப்பு; திடீரென முளைத்த கடைகள்; அரச உத்தியோகஸ்தர்களுக்கு மிரட்டல்!
மக்கள் போராட்டத்தை அடுத்து அசைவ உணவகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற விளம்பரப்பலகை யாழ் மாநகர சபையினரால் அகற்றப்பட்டது.
இந்நிலையில் தற்போது குறித்த அசைவ உணவகத்தின் முகப்பில் சைவ உணவுகள் மட்டும் பரிமாறப்படும் என பதாகையில் குறிப்பிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய வளாகத்தில் அசைவ உண்வகம் திறப்புக்கு சமூக ஆர்வர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.