மாட்டிறைச்சி விலையில் மாற்றம்!
புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (03) இறைச்சிக் கடை உரிமையாளர்களுடன் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (04) தொடக்கம் ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியை 2,000 ரூபாவுக்கும் 200 கிராம் முள் சேர்க்கப்பட்ட ஒரு கிலோ கிராம் இறைச்சியை 1,800 ரூபாவுக்கும் விற்பனை செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்விலைப்பட்டியலை அனைத்து இறைச்சிக் கடைகளிலும் காட்சிப்படுத்தும் பொருட்டு விலைப்பட்டியல் ஆணையாளரினால் இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.