வடக்கு ஆளுநர் பதவியில் விரைவில் மாற்றம்!
வடமாகாண ஆளுநர் பதவியில் விரைவில் மாற்றம் வரவுள்ளதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஆளுநர் பதவிகளில் மாற்றத்தையும், இடமாற்றத்தை மேற்கொள்ளவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
இதன்படி மத்திய மாகாணத்துக்கு நவீன் திஸாநாயக்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்க் கட்சிகள் முறைப்பாடு
அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை தயா கமகேவுக்கு வழங்கும் முடிவுக்கு மொட்டு கட்சி பிரமுகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அதேவேளை , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு எதிராக வடக்கில் உள்ள பல தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே வடக்கு ஆளுநர் பதவியில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.