இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் இன்று (18) தங்க விலையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுணுக்கு 1,000 ரூபாயால் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம் அடிப்படையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,075 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச தங்க சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களின் தாக்கம் இலங்கையிலும் பிரதிபலித்து வருகின்றது.