இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்
உலகளாவிய அரசியல் பதற்றங்கள், அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களினால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
நேற்று(24) காலை நிலவரப்படி தங்கத்தின் விலை அதிகரித்திருந்த நிலையில் நேற்று பிற்பகல் வேளையில் தங்கத்தின் விலை 5,000 ரூபாயால் குறைந்திருந்தது.

அதன்படி இன்றும்(24) தங்கத்தின் விலை நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.385,000 விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.356,000 விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.