சந்திரலேகா கொலையில் சிக்கிய ஒருவர்
பதுளைப் பகுதியின் தெபத்தை பெருந்தோட்டப் பிரிவைச் சேர்ந்த லெட்சுமணன் சந்திரலேகா என்ற 58 வயதுடைய பெண்ணின் கொலை குறித்து, அதே தோட்டத்தைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவரை, பதுளைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்று (25-01-2022) தேயிலை மலையில் கோரமாகக் கொலை செய்யப்பட்டிருந்த பெண்ணின் உடலுறுப்புக்கள் சிலவற்றை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டிருப்பதாக பதுளைப் பொலிசார் தெரிவித்த அதேவேளை, கொலை குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் சடலம் தற்போது, பதுளை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கொலையுண்ட பெண் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது ஆரம்பக்கட்ட விசாரணையின் போது, தெரிய வந்துள்ள நிலையில், பொலிஸ் மோப்பநாயின் துணையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், மேலும் இருவர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.