2022 ஆம் ஆண்டில் நிகழவுள்ள கிரகணங்கள் எத்தனை தெரியுமா?
இந்த வருடம் (2021) நிறைவு பெற இன்னும் சில தினங்களே உள்ளன. இந்நிலையில் 2022 பிரமாண்டமாகவும் தெய்வீகமாகவும் வரவேற்கப்படும். இவ்வாறான நிலையில் புத்தாண்டின் முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதில் மக்களும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
இதேவேளை, கிரகணம் என்று கூறியதும் அனைவரும் அதை பற்றி தெரிந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஏனென்றால் கிரகணம் மத ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும்.
இதில் 2 சந்திர கிரகணங்கள் மற்றும் 2 சூரிய கிரகணங்கள் ஆகும். 2022 இல் சந்திர கிரகணம் எப்போது நிகழும் என்பதை பார்போம்.
2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் எப்போது தெரியுமா :
2022ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் மே 16 - 01-2022 ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த நாள் திங்கட்கிழமையில் வருகிறது. குறித்த சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக தோன்றும். இது காலை 07:02 முதல் தொடங்கி மதியம் 12:20 வரை நிகழும்.
மேலும் இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் தெற்கு/மேற்கு ஐரோப்பா, தெற்கு/மேற்கு ஆசியா, தென் அமெரிக்கா, பசிபிக், ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, அண்டார்டிகா உள்ளிட்ட சில பகுதிகளில் காணலாம். இது தவிர, இந்த சந்திர கிரகணத்தின் சூதக் காலம், கிரகணத்திற்கு 9 மணி நேரத்திற்கு முன் துவங்கும்.
2022 இரண்டாவது சந்திர கிரகணம் எப்போது தெரியுமா:
2022 ஆம் ஆண்டின் 2வது சந்திர கிரகணம் ஆண்டின் இறுதியில் அதாவது நவம்பர் 8- 01-2022 ஆம் திகதி செவ்வாய்கிழமை நிகழவுள்ளது. இந்திய நேரப்படி இந்த நாளில் பிற்பகல் 1.32 மணி முதல் இரவு 7.27 மணி வரை நிகழும். மேலும், இந்த சந்திர கிரகணத்தை இந்தியா, ஆஸ்திரேலியா, வடக்கு / கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணலாம்.
மேலும், குறித்த சந்திர கிரகணத்தின் சூதகம் 9 மணி நேரத்திற்கு முன்பு தொடங்கி கிரகணம் முடியும் வரை இருக்கும். இப்படியான சூழ்நிலையில், கர்ப்பிணிகள் உட்பட அனைத்து மக்களும் சூதக் காலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.