பிளாஸ்டிக் போத்தல் மூடியால் இருக்கை ; களனி பல்கலை மாணவர்களின் சாதனை
களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர், மருதானை ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதைகளில் காணப்படும் பிளாஸ்டிக் போத்தல் மூடிகளைப் பயன்படுத்தி ஒரு பயணிகள் இருக்கையை உருவாக்கியுள்ளனர்.
தனியார் நிறுவனத்தின் ஆதரவுடன், மருதானை ரயில் நிலையத்தின் முழு மேற்பார்வையின் கீழ், பயணிகள் இருக்கையை உருவாக்கியுள்ளனர்.

இந்தப் பயணிகள் இருக்கை மருதானை ரயில் நிலையத்திற்கு நவம்பர் 5 ஆம் திகதி வழங்கப்பட்டது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு உற்பத்தி கண்டுபிடிப்பை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும், மருதானை ரயில் நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்காக இருக்கையை மருதானை ரயில் நிலைய கண்காணிப்பாளர் கபில புஷ்பகுமார திறந்து வைத்தார்.