முல்லைத்தீவு மாணவிக்கு வீதியில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற அதிர்ச்சிச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 3.30 மணியளவில், வற்றாப்பளையில் மேலதிக வகுப்பை முடித்துவிட்டு தனது துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த உயர்தர வகுப்பு மாணவி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இலக்கத்தகடு இல்லாத விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்
இலக்கத்தகடு (Number Plate) இல்லாத ஒரு விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள், கண் இமைக்கும் நேரத்தில் மாணவியின் கழுத்தில் இருந்த சுமார் முக்கால் பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த வாரமும் இதே பகுதியில் கடைக்குச் சென்ற பெண்ணொருவரிடம் ஒரு பவுண் சங்கிலி பறிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ச்சியாக அரங்கேறும் இத்தகைய கொள்ளைச் சம்பவங்களால் முள்ளியவளை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தற்போது முள்ளியவளை பொலிஸார் அப்பகுதியிலுள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வீதிகளில் இலக்கத்தகடு இன்றிச் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் மோட்டார் சைக்கிள்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.