தமிழர் பகுதியில் முகத்தில் மிளகாய்தூள் வீசி சங்கிலி பறிப்பு!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த நபரின் முகத்தில் மிளகாய்த் தூளை வீசி 595,000 பெறுமதியான தங்கச்சங்கிலியை அபகரித்துச் சென்றவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 08 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சந்தேக நபர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய சந்தேக நபர்
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 34 வயதுடைய சந்தேக நபர் நேற்றையதினம் (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.