மத்திய வங்கியிடம் உள்ள டொலர் கையிருப்பு தொடர்பில் தகவல் வெளியிட்ட பிரதமர்
மத்திய வங்கியிடம் ஒரு மில்லியன் டாலர்கள் கூட இல்லை. கடன்களை திருப்பி செலுத்தும் திட்டம் தமக்கு இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடன்களை மீளச் செலுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்தார். உண்மை என்னவென்றால், மத்திய வங்கியிடம் ஒரு மில்லியன் டாலர்கள் கூட இல்லை. பணத்தை எங்கிருந்து பெறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. பொருளாதார மீட்புக் குழுவிடம் பேசுவேன்.
உங்கள் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உலக வங்கியிடமிருந்து 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றது. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நாங்கள் ஆராய்வோம். இந்த பணத்தை பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.