கருப்புப் பணமாற்றம் தொடர்பில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மத்திய வங்கி
இலங்கையில் கருப்புப் பணம் பரிமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இலங்கையின் மத்திய வாங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகாரிகள் அதிகாரபூர்வமற்ற முறையில் பணம் சேகரிப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சட்டப்பூர்வமான வழிகள் உள்ளன என்று கூறிய கப்ரால், இதற்காக முறையான முறைமைகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.
உத்தியோகபூர்வ வழிகளில் இருந்து பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் ஓய்வூதியம் போன்ற கூடுதல் சலுகைகளை வழங்கும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.