இந்தியாவின் செயலால் எதிர்வரும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடலாம் - பசில் ராஜபக்ஷ
மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க இந்தியா 1 பில்லியன் டொலர் கடனாக வழங்கியுள்ளது.
எனவே, புத்தாண்டின் போது, மக்கள் தடையின்றி பெறுமதியான பொருட்களைப் பெற முடியும். என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று பிற்பகல் நாடு திரும்பினார்.
அமைச்சரின் டெல்லி பயணத்தின் போது, இந்தியாவுடன் 1 பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இங்கு கருத்து தெரிவித்த நிதி அமைச்சர், "இந்தியா எங்களுடன் தொடர்ந்து தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
தற்போது மருந்துகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதை திருப்பிச் செலுத்த வேண்டும்." என கூறினார்.