பரீட்சையில் சித்தியடைந்ததை கொண்டாட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
பரீட்சையில் சித்தியடைந்ததை கொண்டாட பலாங்கொடை , சமனலவெவ நீர்த்தேக்கத்திற்கு நீராடச்சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வென்னப்புவ கொலிஞ்சாடிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் கொரிய மொழி பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்துள்ள நிலையில் அதனை கொண்டாடுவதற்காக ஆசிரியர் மற்றும் இளைஞர்கள் சிலருடன் இணைந்து சமனலவெவ நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது, இந்த இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சமனலவெவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.