கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் தொடர்புடைய செவ்வந்தியின் சிசிடிவி காட்சிகள்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு துப்பாக்கியை வழங்கிய இஷாரா செவ்வந்தி, கொலைக்கு முந்தைய நாள் (18) கடுவெலவில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்காக வந்ததைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அந்த ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் இருந்து இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
கொலை நடந்ததற்கு முந்தைய நாள் (18) மாலையில் அவர்கள் காரில் ஹோட்டலுக்கு வந்ததாகவும், அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததாகவும், மறுநாள் மஹரகம பகுதியில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஹோட்டல் நிர்வாகத்திடம் கூறியதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே இரவில், மற்றொரு காரில் வந்த ஒருவர் ஹோட்டல் முன் வந்து அந்தப் பெண்ணிடம் ஒரு பையைக் கொடுத்ததாகவும், இதில், துப்பாக்கி அடங்கிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் குறித்த புத்தகம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.