மத்திய அரசிடம் அனுமதி கோரிய சிபிஐ...கைது செய்யப்படுவாரா முன்னாள் அமைச்சர்?
திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர்ஆ.ரசவைக் கைது செய்ய மத்திய அரசிடம் சிபிஐ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முறைக்கேடான சொத்துகுவிப்பு வழக்கு தொடர மத்திய அரசிடம் சிபிஐ அனுமதி கோரியுள்ளது. கடந்த 2015 ம் ஆண்டில் சுமார் 28 கோடி அளவில் சொத்து குவித்துள்ளதாக ஆ.ராசா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் ஆ. ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனையில் தான் இந்த சொத்துகுவிப்பு அம்பலமானது.
முன்னதாக 2 ஜி வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் பலர் விடுவிக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்தும் சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்ற விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்த வழக்கிலும் சிபிஐயிடம் போதிய ஆதாரங்கள் உள்ளதால், ஆ.ராசா நிச்சயம் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.