நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு ; மீட்பு பணிகளுக்கு உதவ இலங்கை தயார்
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு உதவி வழங்க இலங்கையானது தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது 'நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள செய்தி அறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைகிறேன்.

வெறும் 10 மாதங்களுக்கு முன்னர் ஒரு கொடிய சூறாவளியில் இருந்து மீண்டு வருமொரு நாடு என்ற வகையில், நேபாள மக்களின் துயரத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.
நேபாள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் இலங்கையும் என்னுடன் இணைந்துகொள்கிறது' என்றுள்ளது.