உடலில் மாயம் செய்யும் கஜு நட்ஸ்; ஓடிப்போகும் நோய்கள்!
கஜு நட்ஸ் எனும் முந்திரி பருப்பு நம்மை பல நோய்களிடமிருந்து காக்கும் சக்தி கொண்டது . கஜு நட்ஸ் இல் துத்தநாகம் உள்ளது .
இந்த துத்தநாகம் என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. இது அடிப்படை செல் செயல்முறைகளுக்கு முக்கியமானது. துத்தநாகத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்வது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
உடலில் மாயம் செய்யும் கஜு நட்ஸ்
1.நாம் சுவீட்டில் சேர்க்கும் முந்திரிப்பருப்பு உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை குறைத்து , உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.
2.சிலருக்கு ஹார்ட் பிரச்சினை வருமோ என்ற அச்சம் இருக்கும் .இதய நோய் வருவதற்கான ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய வீக்கத்தை குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முந்திரிப் பருப்பில் உள்ளது.
3.மேலும் முந்திரிப்பருப்பு நம் உடலில் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
4.ஒரு பிடி முந்திரிப்பருப்பில் நிறைவுற்ற கொழுப்புகள், மெக்னீசியம், பொட்டாசியம், போன்ற தாதுக்கள் நிறைய உள்ளது
5.சிலருக்கு சுகர் வந்து விடுமோ என்ற அச்சம் இருக்கும் .நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது முந்திரிப்பருப்பு.
6.டைப் 2 நீரிழிவு நோயாளிகள் முந்திரிப்பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்
7.இதில் நார்ச்சத்து காணப்படுகிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பை தடுக்க உதவுகிறது
8.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது முந்திரி பருப்பு.
9.முந்திரிப் பருப்பில்நிறைய வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது. இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருந்து நோய்கள் அண்டாமல் காக்கிறது .