வர்த்தமானியை உதாசீனம் செய்த 453 பேக்கரிகளுக்கு எதிராக வழக்கு
453 பேக்கரிகளுக்கு எதிராக வழங்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பாணுக்கான நிர்ணயிக்கப்பட்ட நிறை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள பாணின் நிறை, விலையை காட்சிப்படுத்தாத பேக்கரிகள் மற்றும் கடைகள் என்பவற்ருக்கு எதிராகவே இவ்வாரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சோதனைகள் தொடரும்
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என நாடு முழுவதும் கடந்த 5 ஆம் திகதி சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 453 பேக்கரிகள் மற்றும் கடைகள் அடையாளம் காணப்பட்டதாகவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அனைத்து பேக்கரிகள் மற்றும் கடைகளில் விற்பனைக்காகக் காட்டப்படும் பாணின் நிறை மற்றும் விலை தெளிவாகக் காட்டப்பட வேண்டும் என்றும், பாணின் நிறையை அளவிடுவதற்கு வாடிக்கையாளர் கோரும்போது, நிறை மற்றும் அளவீட்டு நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட அளவு இருக்க வேண்டும் என்றும் பேக்கரிகள் மற்றும் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதேசமயம் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்வார்கள் எனவும், நுகர்வோருக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின், 1977 என்ற நுகர்வோர் அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் எனவும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.