16 வயதுடைய சிறுவனின் உயிரை பறித்த கார் சாரதி ; தீவிரமாகும் விசாரணை
கொஹுவலை எஸ். டி எஸ். ஜயசிங்க மாவத்தையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பஸ் தரிப்பிடத்தில் மோதிய விபத்தில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, நுகேகொடையிலிருந்து கொஹுவலை நோக்கிப் பயணித்த குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் மற்றொரு காரின் பின்புறத்திலும் மோதியுள்ளது.

மேலதிக விசாரணை
அதனைத் தொடர்ந்து, அருகிலிருந்த பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த குறித்த சிறுவன் மீது மோதிய அந்த வாகனம், பின்னர் மற்றொரு மோட்டார் சைக்கிள், கார் மற்றும் வேன் ஆகியவற்றின் மீதும் மோதியுள்ளது.
படுகாயமடைந்த குறித்த சிறுவன் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் நுகேகொடை பகுதியைச் சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் பாணந்துறை, மொரவில பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.