லொறி மற்றும் பேருந்துக்கிடையே சிக்கி நசுங்கிய கார் ; உயிரைக் காக்க தப்பி ஓடிய சாரதி
லொறி மற்றும் பேருந்து வாகனங்களுக்கு இடையே காரொன்று நசுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் கடவத்தை மஹர பகுதியில் உள்ள படிகமாருவ அருகே இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணை
விபத்துத் தொடர்பில் தெரிய வருகையில், மஹர பகுதியில் உள்ள படிகமாருவ வீதியில் கார் ஒன்று லொறிக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்தது.
அதன்போது பின்னால் வந்த பேருந்து ஒன்று காரை மோதியதில் விபத்து ஏற்பட்டது. பேருந்து காரை மோதித் தள்ளியதில் கார், லொறி மற்றும் பேருந்துக்கிடையே சிக்கி நசுங்கியுள்ளது. விபத்து ஏற்படும் போது காரின் சாரதி, காரிற்குள் இருந்துள்ளார்.
விபத்தையடுத்து உயிரைக் காக்க காரை விட்டு தப்பி வெளியே ஓடினார். விபத்தில் அதிஷ்டவசமாக சாரதி உயிர் தப்பியுள்ளார்.
எனினும் கார் பகுதியளவில் நசுங்கி சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.