நிவாரணம் வழங்க சென்ற கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் தெய்வாதீனமாக விபத்தின் போது காயங்கள் ஏற்பட்டவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (22) மலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று நானுஓயா சாமர்செட் பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நோர்வுட்யில் இருந்து நுவரெலியா ராகலை பகுதிக்கு இயற்கை அனர்த்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிவிட்டு மீண்டும் நோர்வுட் நோக்கிப் பயணித்த கார் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் காரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.