காசா எல்லை கட்டுப்பாட்டுக்குள்; 1500 உடல்கள் மீட்பு
காசாவில் உள்ள தனது எல்லைகளை மீள கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் ஹமாஸ் உறுப்பினர்களின் 1500 உடல்கள் காணப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஸ்ரேல் மற்றும் காசா பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,500 ஹமாஸ் போராளிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கு திறக்கப்பட்டிருந்த பாதை மூடல்
நேற்று எல்லை ஊடாக ஊடுருவல் எதுவும் இடம்பெறவில்லை என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அழிக்கப்பட்ட எல்லைபகுதிகளில் கண்ணிவெடிகளை புதைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
காசா பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து இஸ்ரேலியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இதேநேரம் காசாவை விட்டு வெளியேற விரும்பும் பாலஸ்தீனியர்களுக்கு திறக்கப்பட்டிருந்த எகிப்து வழியான பாதை தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.