பொலிஸ் கான்ஸ்டபிளை கடித்துவிட்டு தப்பியோடிய கஞ்சா கடத்தல்காரரால் பரபரப்பு!
பண்டாரகம, பத்தேகொட பகுதியில் கஞ்சா கடத்தல்காரர் ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை கடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த கான்ஸ்டபிள் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பி ஓட்டம்
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழு சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தபோது, கலானிகம சந்திக்கு அருகில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் வைத்திருந்த கையடக்கத் தொலைபேசி அழைப்புகளின் பேரில் மற்றொருவரை கைது செய்வதற்காக வேறொரு பிரதேசத்திற்கு சென்ற போது சந்தேக நபர், இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் ஒரே நேரத்தில் தாக்கியுள்ளார்.
பின்னர், சந்தேக நபர் கைது செய்யப்படவிருந்தபோது, அவர் அதிகாரிகளுடன் சண்டையிட்டு சந்தேக நபர் கான்ஸ்டபிளைக் கடித்துவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.